முதல் டெஸ்ட் போட்டிக்கான 11 பேர் கொண்ட கணிக்கப்பட்ட இந்திய அணி.


ind vs sa 2018 predicted XI for team india

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டீ20 தொடரில் விளையாட உள்ளது.

ind vs sa 2018 predicted XI for team india

இதில் முதல் டெஸ்ட் போட்டி இன்று கேப் டவுனில் வைத்து நடைபெற உள்ளது இதற்கான கணிக்கப்பட்ட 11 பேர் கொண்ட இந்தியா அணியை தற்போது பார்க்கலாம்.

இந்தியா அணி பேட்டிங்கில் மிக வலுவான நிலையிலும் தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சில் மிக வலுவான நிலையிலும் உள்ளது.

இதன் அடிப்படையில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா அணி 7 பேட்ஸ்மேன்கள் மற்றும் 4 பௌலர்களுடன் களம் இறங்க வாய்ப்புகள் உள்ளது.

ind vs sa 2018 predicted XI for team india

தொடக்க வீரர்களாக முரளி விஜய் மற்றும் ஷிகர் தவான் களம் இறங்குவார்கள் ஷிகர் தவான் கணுக்கால் காயம் காரணமாக களம் இறங்குவது சந்தேகம் என கூறப்பட்ட நிலையில் அவர் நன்றாக உள்ளதாகவும் முதல் போட்டியில் களம் இறங்குவார் என கூறப்படுகின்றது.

அடுத்ததாக இந்தியா அணியின் தற்போதைய தூணாக செயல்பட்டு வரும் புஜாரா களம் இறங்குவர் அவரை தொடர்ந்து கேப்டன் விராட் கோலியும் களம் இறங்குவார்.

5தாவது இடத்தில அஜின்கியா ரஹானே களம் இறங்குவார் இந்தியா அணி வீரர்களில் மிக குறைந்த வீரர்களே வெளிநாட்டு ஆடுகளத்தில் ரன்களை குவிக்க கூடியவர்கள் அவர்களில் ரஹானேவும் ஒருவர்.

ind vs sa 2018 predicted XI for team india

இவர்களை தொடர்ந்து இந்தியா அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டிய களம் இறங்க வாய்ப்புகள் உள்ளது ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் ரோஹித் சர்மா களம் இறங்குவார்.

பந்து வீச்சினை பொறுத்தவரை மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் ஒரு சுழற்பந்து வீச்சளரும் களம் இறங்குவார்கள்.

ind vs sa 2018 predicted XI for team india

இதில் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா மற்றும் முகமத் ஷமி களம் இறங்குவார்கள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் களம் இறங்குவார்.

கணிக்கப்பட்ட இந்தியா அணி:

முரளி விஜய், ஷிகர் தவான், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ரோஹித் சர்மா, வ்ரிதிமான் சாஹா,அஸ்வின், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா, முகமத் ஷமி

Loading...

Comments 0

Your email address will not be published. Required fields are marked *

You may also like