மச்சான் காலுக்குள்ளையே போடுறாண்டா என தமிழில் ராகுலிடம் பேசிய முரளி விஜய்.


தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்தியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகின்றது.

Murali Vijay Funny Tamil Conversation During Live Match

கேப் டவுனில் நடைபெற்ற முதல் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி தோல்வியை தழுவியது இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்டுரியனில் வைத்து நடைபெற்று வருகின்றது.

முதல் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது அதையடுத்து மார்க்ரம், ஹாசிம் ஆம்லா மற்றும் டு பிளேஸிஸின் சிறப்பான ஆட்டத்தினால் தென் ஆப்பிரிக்கா அணி 335 ரன்களை அடித்தது.

Murali Vijay Funny Tamil Conversation During Live Match

அதையடுத்து களம் இறங்கிய இந்தியா அணி வீரர்கள் அடுத்ததுது சொதப்பலான ஆட்டத்தினை வெளிப்படுத்தினாலும் இந்தியா அணியின் கேப்டன் 153 ரன்களை அடித்தார்.

அவருக்கு துணையாக முரளி விஜய் 46 ரன்களும் அஸ்வின் 38 ரன்களும் அடித்தனர் இதனால் இந்தியா அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களை எடுத்தது.

அதன் பின் தென் ஆப்பிரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியது பும்ராவின் அதிரடி பந்து வீச்சினால் மார்க்ரம் மற்றும் ஆம்லா அவுட் ஆகினர்.

Murali Vijay Funny Tamil Conversation During Live Match

இருப்பினும் ஜோடி சேர்ந்த டீவில்லியர்ஸ் மற்றும் டீன் எல்கர் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தனர் இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சில் 258 ரன்களை அடித்தது.

இதன்மூலம் இந்தியா அணிக்கு 287 ரன்களை இலக்காக தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயித்துள்ளது.

இதையடுத்து இந்தியா அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியது இதில் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் முரளி விஜய் களம் இறங்கினர்.

Murali Vijay Funny Tamil Conversation During Live Match

அப்போது முரளி விஜய் ரபாட வீசிய ஓவரின் போது ராகுலிடம் தமிழில் பேசியது ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகி உள்ளது.

அதில் விஜய் மச்சான் காலுக்குள்ளையே பந்து போடுறாண்டா பாத்து விளையாடு என ராகுலிடம் கூறுவது பதிவாகி உள்ளது.

தற்போது இந்தியா அணி இரண்டாவது இன்னிங்சில் 35 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது.

Murali Vijay Funny Tamil Conversation During Live Match

முரளி விஜய் 25 பந்துகளில் 1 பௌண்டரி அடித்து மொத்தம் 9 ரன்கள் எடுத்த நிலையில் ரபாட வீசிய பந்தில் போல்ட் ஆகி அவுட் ஆகினார்.

அவரை அடுத்து லோகேஷ் ராகுல் 29 பந்துகளில் 4 ரன்கள் அடித்த நிலையில் லுங்கி நிகிடி வீசிய பந்தில் மஹாராஜிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார்.

அவரை தொடர்ந்து களம் இறங்கிய இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இன்னிங்ஸ் போல் ஆடுவார் என எதிர்பார்க்க பட்ட நிலையில் ஏமாற்றம் அளிக்கும் விதமாக 20 பந்துகளில் 5 ரன்கள் எடுத்த நிலையில் லுங்கி நிகிடி அவுட் ஆகினார்.

Murali Vijay Funny Tamil Conversation During Live Match

தற்போது புஜாரா மற்றும் பார்திவ் படேல் 11 மற்றும் 5து ரன்கள் அடித்து களத்தில் உள்ளனர் இந்தியா அணி 4ஆம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு வெறும் 35 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது.

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:

Mid pitch Tamil Conversation

Vijay to Rahul: Machan, indha over ellame ulla dhan podraan! Tag a mate with whom you have a mid pitch tamil conversation! 😀

Posted by Srini Mama on Tuesday, January 16, 2018

Loading...

Comments 0

Your email address will not be published. Required fields are marked *

You may also like