நடுவரிடம் சண்டையிட்ட கோலியை கண்டித்து அபராதம் விதித்த ஐசிசி.


virat kohli fined for breaching icc code of conduct

சென்டுரியனில் நடந்து வரும் இரண்டாவது போட்டியில் ஆட்டத்தின் நடுவரிடம் வாக்குவாதம் செய்த கோலிக்கு அபராதம் விதித்தது சர்வதேச கிரிக்கெட் வாரியம்.

virat kohli fined for breaching icc code of conduct

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்தியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகின்றது.

கேப் டவுனில் நடைபெற்ற முதல் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி தோல்வியை தழுவியது இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்டுரியனில் வைத்து நடைபெற்று வருகின்றது.

முதல் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது அதையடுத்து மார்க்ரம், ஹாசிம் ஆம்லா மற்றும் டு பிளேஸிஸின் சிறப்பான ஆட்டத்தினால் தென் ஆப்பிரிக்கா அணி 335 ரன்களை அடித்தது.

virat kohli fined for breaching icc code of conduct

அதையடுத்து களம் இறங்கிய இந்தியா அணி வீரர்கள் அடுத்ததுது சொதப்பலான ஆட்டத்தினை வெளிப்படுத்தினாலும் இந்தியா அணியின் கேப்டன் 153 ரன்களை அடித்தார்.

அவருக்கு துணையாக முரளி விஜய் 46 ரன்களும் அஸ்வின் 38 ரன்களும் அடித்தனர் இதனால் இந்தியா அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களை எடுத்தது.

அதன் பின் தென் ஆப்பிரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியது பும்ராவின் அதிரடி பந்து வீச்சினால் மார்க்ரம் மற்றும் ஆம்லா அவுட் ஆகினர்.

virat kohli fined for breaching icc code of conduct

இருப்பினும் ஜோடி சேர்ந்த டீவில்லியர்ஸ் மற்றும் டீன் எல்கர் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தனர் மூன்றாவது நாள் ஆதின போது மழை பெய்து ஆட்டத்தை தடை செய்தது.

சிறிது நேரத்திற்கு பின்பு மீண்டும் ஆட்டம் தொடங்கியது இந்நிலையில் மைதானத்தில் இருந்த ஈரப்பதத்தை காரணமாக பந்தின் தன்மை மாறியுள்ளதாக போட்டியில் நடுவர் மைக்கேல் காப்பிடம் இந்தியா அணியின் கேப்டன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில் போட்டியின் நடுவர் பந்து சரியாக தான் உள்ளது என கூறியதை அடுத்து கோலி ஆக்ரோஷமாக பந்தினை தூக்கி வீசினார் இது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறை படி தவறாகும்.

virat kohli fined for breaching icc code of conduct

தற்போது கோலி ஐசிசி விதிமுறை சரத்து 2.1.1 படி வீரர்களோ அல்லது வீரர்களுக்கு துணையாக இருக்கும் அணியின் உறுப்பினர்களோ போட்டியின் நன்மதிப்பை மீறும் வகையில் நடந்து கொள்ள கூடாது.

இது முதலாம் கட்ட நன்னடத்தை சட்டத்தின் கீழ் வருகின்றது இதை மீறுபவர்களுக்கு 25 சதவீதம் முதல் 50து சதவீதம் வரை வீரரின் அந்த போட்டியின் சம்பளத்தில் அபராதம் விதிக்கப்படும்.

அத்துடன் விதியை மீறும் வீரரின் நன்னடத்தை புள்ளியில் இருந்து ஒன்று அல்லது இரண்டு புள்ளிகள் குறைக்கப்படும்.

virat kohli fined for breaching icc code of conduct

அதன் படி விராட் கோலி நன்னடத்தை விதியை மீறியதை அடுத்து ஐசிசி அவருக்கு போட்டியின் சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமும் நன்னடத்தை புள்ளியில் இருந்து ஒரு புள்ளி குறைப்பதாகவும் ஐசிசி அறிவித்துள்ளது.

போட்டி முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி தான் நடந்துகொண்ட விதத்திற்கு வருந்துவதாகவும் ஐசிசி எடுக்கும் நடவடிக்கைக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ளார்.

Loading...

Comments 0

Your email address will not be published. Required fields are marked *

You may also like