21 ஆண்டுகளுக்கு பின் தென் ஆபிரிக்கா மண்ணில் இந்த சாதனையை செய்த விராட் கோலி.


vkohli is only the second indian to hit two centuries in south africa

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்தியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகின்றது.

vkohli is only the second indian to hit two centuries in south africa

 

முதல் டெஸ்ட் போட்டி கடந்த 5ஆம் தேதி கேப் டவுனில் வைத்து நடைபெற்றது இந்த போட்டியில் இந்தியா அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்டுரியனில் வைத்து தற்போது நடைபெற்று வருகின்றது.

முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது அதன் பின் காலம் இறங்கிய தொடக்க வீரர் மார்க்ரம் 94 ரன்களும் ஹாசிம் ஆம்லா 82 ரன்களும் எடுத்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தனர்.

vkohli is only the second indian to hit two centuries in south africa

இருப்பினும் டு பிளேஸிஸ் தவிர மற்ற வீரர்கள் யாரும் சரியாக ஆடாத காரணத்தினால் அந்த அணி சற்று தடுமாறியது இருப்பினும் டு பிளேஸிஸ் 63 ரன்களை குவித்தார்.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சில் மொத்தம் 335 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தது.

இதையடுத்து களம் இறங்கிய இந்தியா அணியின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 10 ரங்களில் ஆட்டம் இழந்தார் அவரை அடுத்து களம் இறங்கிய புஜாரா முதல் பந்தில் ரன் அவுட் ஆகினார்.

vkohli is only the second indian to hit two centuries in south africa

அதன் பின் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் முரளி விஜய் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

இருப்பினும் முரளி விஜய் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மகாராஜ் வீசிய பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார்.

அதன் பின் வந்த ரோஹித் சர்மா பார்திவ் படேல் மற்றும் ஹர்திக் பாண்டிய 10, 19 மற்றும் 15 ரன்களில் ஆட்டம் இழந்து விராட் கோலிக்கு நட்புக்கரம் நீட்ட தவறினர்.

vkohli is only the second indian to hit two centuries in south africa

209 ரன்களுக்கு 6 விக்கெட்டினை இழந்து அபாயகரமான நிலையில் இந்தியா அணி இருந்த நேரத்தில் அஸ்வின் மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்தனர் அடுத்து இந்தியா அணியின் பட்டியலில் ரன்கள் கூட தொடங்கியது.

அஸ்வின் 54 பந்துகளில் 7 பௌண்டரிகள் அடித்து மொத்தம் 38 ரன்களை அடித்திருந்த நிலையில் பிளண்டர் பந்தில் டு பிளேஸிஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார்.

இந்தியா அணி 280 ரன்கள் இருந்த நிலையில் அஸ்வின் அவுட் ஆகியதை அடுத்து விராட் கோலி அதிரடியாக ஆட தொடங்கினார் இதன்மூலம் இந்தியா அணி 307 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலி ஆட்டம் இழந்தார்.

vkohli is only the second indian to hit two centuries in south africa

விராட் கோலி 217 பந்துகளில் 15 பௌண்டரிகள் அடித்து மொத்தம் 153 ரன்களை அடித்து தனியாளாக இந்தியா அணியை தூக்கி சென்றார்.

இந்த போட்டியில் கோலி அடித்த சதத்தின் மூலம் தனது 21வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார் கோலி அத்துடன் சுமார் 21 ஆண்டுகளுக்கு பின் தென் ஆப்பிரிக்கா மண்ணில் சதம் அடித்த இந்தியா கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

முன்னதாக கடந்த 1996-97ல் அப்போதைய இந்திய கேப்டன் சச்சின் (169 ரன்கள், கேப்டவுன்) சதம் அடித்தார். அதன் பின் தற்போது சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் கோலி தான்.

vkohli is only the second indian to hit two centuries in south africa

அது தவிர அந்நிய மண்ணில் கடந்த 2011க்கு பின் நடந்த டெஸ்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை (10 சதம்) பின்னுக்கு தள்ளி இந்திய கேப்டன் கோலி (11 சதம்) முதலிடம் பிடித்தார்.

மேலும் சர்வதேச அரங்கில் கேப்டனாக அதிக சதம் அடித்த வீரர்களில் விராட் கோலி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் முதல் இடத்தில ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் 41 சதத்துடன் உள்ளார் அவரை தொடர்ந்து தென் ஆப்ரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித் 33 சதத்துடன் இரண்டாவது இடத்தில உள்ளார்.

Loading...

Comments 0

Your email address will not be published. Required fields are marked *

You may also like